TVK : “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் அவர்கள் தொடங்கி அரசியல் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக, தீவிரமாக அரசியல் செய்து வருகிறார்.
எதிர்வரும் 2026 தேர்தலை நோக்கி தனது கட்சியின் சார்பில் ஒவ்வொரு அடியாக அடுத்தடுத்து எடுத்து வைக்கிறார்கள். தமிழகமெங்கும் ஆலோசனைக் கூட்டங்கள், மதுரையில் இரண்டாவது மாநாடு என எப்போதும் பிஸியாக இருந்து வருகிறது தமிழக வெற்றி கழகம்.
இந்த நிலையில் புதிதாக ஒரு கட்சி தொடங்கினால் அந்த கட்சியை அழிப்பதற்காக, அந்த கட்சியின் எதிர்ப்பாளர்கள் செயல்படுவார்கள். அவ்வாறு இந்த கட்சியையும் உடைப்பதற்காக சில முயற்சிகள் இருந்து கொண்டே தான் வருகின்றன. இந்த முயற்சிகள் எதிர்ப்பாளர்கள் செய்வது என்று பொறுத்துக் கொள்ளலாம்.
ஆனால், சொந்த கட்சி பெயரையே நாமே கெடுத்துக் கொள்வது என்பது மிகவும் மோசம். அதாவது ஒரு வளர்ந்து வரும் கட்சி தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிகளிலுமே நிதானம் தேவை. ஒரு தலைவர் ஒரு பொறுப்பை கொடுத்தால் அதை எந்த குறையும் இல்லாமல், எந்த பிழையும் இல்லாமல் செய்து முடிப்பது அந்த கட்சியாளர்களின் வேலை.
TVK நம்பிக்கையை கெடுத்த புஸ்ஸி..
இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் வளர்ந்து வரும் கட்சியில் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் நபர் ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து தான் செய்ய வேண்டும். இந்த பொறுப்பை தவற விட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
“மக்கள் விரும்பும் முதல் வேட்பாளர் உங்கள் விஜய்” என்னும் ஸ்டிக்கரில் புஸ்ஸி ஆனந்த் புகைப்படம் எதற்கு? கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் கட்சியில் பொறுப்பிற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இந்த மாதிரி வேலைகள் செய்தால், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இதை கண்டிக்க வேண்டும்.
ஆனால் ஒருதடவை தவறு நடந்தால் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து இவ்வாறு தவறுகள் நடப்பது கட்சியின் பெயரை மொத்தமாக கெடுத்து விடும் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தி, உயர் பொறுப்பில் இருப்பவர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
விஜய் கண்டுக்காமல் இருப்பது ஏன்?
இன்னும் ஒரு கேள்வி என்னவென்றால் இவ்வாறு நடந்து கொண்டிருக்க இது எல்லாம் ஏன் விஜய் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இப்போது கீழ் மட்டத்தில் நடக்கும் தவறுகளை கண்டுகொள்ளாத விஜய் முதலமைச்சராக வந்து அமர்ந்ததற்கு அப்புறம் இதேப்போலத்தான் செய்வார்களா என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்தவண்ணம் இருக்கிறது. இந்த பிரச்சனை முற்றுப்புள்ளி வைப்பார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.