Vijaysethupathi : சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தற்போது அவருக்கு அதிகளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்கள் செல்வன் என்றால் சும்மாவா! கோடி ரசிகர்கள் பின்னால் நின்றாலும் கர்வம் காட்டாத நடிகர்.
விஜய் சேதுபதியின் ஒரு படம் திரைக்கு வந்தாலே அது மாஸ் ஹிட் தான். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து திரைக்கு வந்த தலைவன் தலைவி படம் படு ஜோராக திரையரங்குகளில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
நெக்ஸ்ட் பிளான் ரெடி..
தலைவன் தலைவி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதிக்கு வரிசையாக லக் அடித்து வருகிறது. தற்போது பாண்டியராஜின் கூட்டணி போட்டு அடுத்த திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி தயாராகி விட்டார்.
இந்த திரைப்படத்தில் ஒரு டுவிஸ்ட் இருக்கிறது. திரை உலகில் இயக்குனர் மற்றும் நடிகருமான மணிகண்டன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது இன்னும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் திரைப்படத்தில் மாமன் மச்சான் முறை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். அதிலும் முக்கியமாக கிழக்குச் சீமையிலே பட பாணி போல் இயக்க இருக்கின்றனர். முற்றிலும் குடும்ப கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எப்படி தலைவன் தலைவி திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு பிளாக்பஸ்டர் அடித்தது அதேபோல் பாண்டியராஜன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியே கொடுக்கப் போகிறார் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.