Surya Sethupathi: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடித்திருக்கும் பீனிக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆனால் படம் வருவதற்கு முன்பே ஹீரோ தம்பி பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டார்.
ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அவருடைய ஆட்டிட்யூட்டை பார்த்த எல்லோரும் இப்போது வரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து சூர்யா மன்னிப்பு கூட கேட்டு விட்டார். ஆனாலும் அவரை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை.
இது ஒரு பக்கம் இருக்க ப்ளூ சட்டை மாறன் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதில் போதும் போதும் என்ற அளவுக்கு அவர் படத்தையும் ஹீரோவையும் கலாய்த்து தள்ளி இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறனிடம் சிக்கிய சூர்யா சேதுபதி
ஒரு கொலையை செய்து விட்டு ஜெயிலுக்கு போகும் ஹீரோ தன்னை கொல்ல வரும் வில்லன் கோஷ்டியை துவம்சம் செய்கிறார். படம் முழுக்க எத்தனை பேர் வந்தாலும் இழுத்துப் போட்டு அடிக்கிறார்.
எதார்த்தம்னா என்னன்னே தெரியாத அப்பாவியா இருக்காரு இயக்குனர். நம்ம விஜய் சேதுபதி பையன் ஆச்சே அப்படின்னு படம் பார்க்க தியேட்டருக்கு வந்தா அவரு நடிக்கணுமா வேணாமா.
ஆனா ஒவ்வொரு சீன்லயும் ஆடியன்ஸை பார்த்து நீங்க நினைச்சா நான் நடிக்கணுமா. நடிக்க முடியாது போங்கடா அப்படின்னு சொல்ற மாதிரி எல்லா சீன்லையும் முறைச்சு முறைச்சு பார்க்கிறாரு.
இப்படி எல்லாம் பண்ணா அது திமிர் தனம் இல்லையா என பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை. ஏற்கனவே தம்பிக்கு திமிர் பிடித்தவன் என்ற பட்டம் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இதில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல் இருக்கிறது ப்ளூ சட்டை விமர்சனம்.