சாம்சங் போன் வச்சிருந்து, கஸ்டம் ROM போடுறது, ரூட் பண்றதுன்னு டெக்னாலஜில விளையாடறவங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கு. சாம்சங் நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய One UI 8 அப்டேட்ல, “OEM Unlocking”ங்கிற வசதியை நீக்கிட்டதா தகவல் வெளியாகியிருக்கு! இது உண்மையானால், இது கஸ்டம் ROM போடறவங்களுக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறும். இப்போதைக்கு என்னென்ன தகவல்கள் கிடைச்சிருக்கு, இதோட விளைவுகள் என்னங்கறதை பத்தி கொஞ்சம் டீட்டெய்லா பார்ப்போம். சமீபத்தில் வெளியான சாம்சங் Galaxy Z Fold 7 மற்றும் Galaxy Z Flip 7 மாடல்களில் நிறுவப்பட்ட One UI 8 ஸ்டேபிள் பில்டிலும், Galaxy S25 சீரிஸிற்கான One UI 8 பீட்டா அப்டேட்டிலும், டெவலப்பர் ஆப்ஷன்களில் வழக்கமாக இருக்கும் “OEM Unlocking” வசதி மாயமாக மறைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த “OEM Unlocking” ஆப்ஷன் இருந்தாதான், ஒரு சாம்சங் போனோட பூட்லோடரை (Bootloader) அன்லாக் பண்ண முடியும். அப்படி அன்லாக் பண்ணினாதான், கஸ்டம் ROM-களை இன்ஸ்டால் பண்ணவோ, போனை ரூட் பண்ணவோ முடியும்.
XDA டெவலப்பர்ஸ் ஃபோரமில் உள்ள டெவலப்பர்கள், One UI 8 firmware-ன் கோட் பகுதிகளை ஆய்வு செஞ்சதுல, “ro.boot.other.locked” என்ற வேல்யூ 1 ஆக செட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த வேல்யூ 0 ஆக இருந்தாதான் பூட்லோடரை அன்லாக் பண்ண முடியும். இப்போ 1 ஆக மாத்தப்பட்டிருக்கிறது, இந்த மாற்றம் தற்காலிகமானதல்ல, ஒரு நிரந்தரமான முடிவாக இருக்கலாம்ங்கறதை காட்டுது. இதுவரைக்கும் அமெரிக்காவில் விற்கப்படும் சாம்சங் போன்களில் மட்டும்தான் இந்த பூட்லோடர் லாக் இருந்தது, மத்த எல்லா இடங்கள்லயும் OEM Unlocking வசதி இருந்தது. ஆனா, One UI 8 அப்டேட் மூலமா, இந்த கட்டுப்பாடு உலகளாவியதா (Globally) எல்லா போன்களுக்கும் கொண்டுவரப்படுதுன்னு சொல்றாங்க.
இதோட விளைவுகள் என்ன? யாரெல்லாம் பாதிக்கப்படுவாங்க?
இந்த மாற்றம் பெரிய அளவுல கஸ்டம் ROM இன்ஸ்டால் பண்ற, ரூட் பண்ற டெவலப்பர்கள் மற்றும் டெக் ஆர்வலர்களைத்தான் பாதிக்கும். பெரும்பாலான சாதாரண சாம்சங் யூசர்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்துறது கிடையாதுங்கறதுனால, அவங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமா இருக்காது.
கஸ்டம் ROM-கள் இல்லை: இனிமேல், One UI 8 அல்லது அதற்குப் பிந்தைய வெர்ஷன்களில் இயங்கும் சாம்சங் போன்களில் கஸ்டம் ROM-களை இன்ஸ்டால் செய்வது சாத்தியமில்லை.
ரூட்டிங் இல்லை: ரூட் செய்வதற்கான வழிகளும் அடைபட்டுவிடும்.
பாதுகாப்பு அதிகரிப்பு: சாம்சங் இதை பாதுகாப்பு காரணங்களுக்காக செய்திருக்கலாம்னு ஒரு தரப்புல சொல்றாங்க. பூட்லோடர் லாக் ஆகுறதுனால, அங்கீகரிக்கப்படாத மென்பொருட்கள் இன்ஸ்டால் ஆகுறது தடுக்கப்பட்டு, போனின் பாதுகாப்பு அதிகரிக்கும்.
போன் ஆயுள் குறைவு? ஒரு போனோட அதிகாரப்பூர்வ சப்போர்ட் முடிஞ்சதுக்கு அப்புறமும், கஸ்டம் ROM-கள் மூலமா புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை போட்டு, போனின் ஆயுளை நீட்டிக்க முடியும். ஆனா, இந்த வசதி இல்லாததுனால, அந்த வாய்ப்பு பறிபோகும்.
சில டெவலப்பர்கள், One UI 8 அப்டேட் வராத சாம்சங் போன்கள்ல பூட்லோடரை அன்லாக் செஞ்சு வெச்சுக்கிட்டா, அப்டேட் பண்ணாலும் அன்லாக்லேயே இருக்கும்னு சொல்றாங்க. ஆனா, One UI 8 அப்டேட் பண்ணா, அன்லாக் பண்ணின பூட்லோடரும் லாக் ஆகிடும்னு சில அறிக்கைகள் சொல்றதுனால, இது உறுதி செய்யப்படவில்லை. சாம்சங் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான ஒரு அறிக்கை வெளியாகவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.