Vijay: திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்து போய் இருக்கிறது. மேலும் twitter பக்கத்தில் பலரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து பேச வேண்டும், அந்த குடும்பத்தை நேரில் சந்திக்க வேண்டும் என அவரை டேக் செய்து கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் விஜய் அஜித்தின் வீட்டிற்கு சென்று அவருடைய குடும்பத்தாரை சந்தித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.
அஜித் வீட்டிற்கு சென்ற விஜய்
விஜய் திடீரென பொதுவெளிக்கு வர நேரிட்டால் கட்டுக்கடங்காத கூட்டம் எல்லாம் வரும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என பேசப்பட்டது. இதை எல்லாம் தாண்டி தற்போது விஜய் திருப்புவனத்தில் இருக்கிறார்.

நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அந்த குடும்பத்தினரிடம் போனில் பேசி இருந்தார். மேலும் அஜித்தின் தம்பிக்கு அரசு வேலைக்கு ஆணை கொடுக்கப்பட்டது. மேலும் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அஜித் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் தொலைபேசியில் பேசினார். இரு பெரும் தலைவர்களும் தொலைபேசியில் தங்கள் ஆறுதலை தெரிவிக்க விஜய் நேரடியாக சென்றிருப்பது அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.