பசுபதி செய்த சதியால், உயிரை விட்ட வெண்ணிலா.. விஜய் மீது விழுந்த பழி, சைலன்டாக இருக்கும் மாமா – Cinemapettai

Tamil Cinema News

Mahandhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய்யை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட வெண்ணிலா, பசுபதி ராகினி சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்தார். இதனால் விஜய் ஜெயிலில் இருக்கும்படி நிலைமை இருந்தது. ஆனால் காவிரி, புத்திசாலித்தனத்தால் விஜய் மீது விழுந்த பழியை தகர்த்து எறிந்து வெளியே கூட்டிட்டு வந்து விட்டார்.

அத்துடன் வெண்ணிலாவை பார்த்து உனக்கு உண்மையிலேயே விஜய் மீது எந்தவித காதலும் இல்லை. எனக்கு கிடைக்காத விஜய் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற ஒரு கெட்ட எண்ணம் தான் உனக்கு இருக்கிறது. அதனால் இனி நீ இல்லை யார் தடுத்தாலும் என்னுடைய விதியை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டு விஜய் கூட்டிட்டு போய்விடுகிறார்.

இதனால் ஏமாற்றத்தில் இருக்கும் வெண்ணிலா இதற்கெல்லாம் காரணம் பசுபதி தான் என்று நினைத்து பசுபதி இடம் நியாயம் கேட்கப் போகிறார். கூடவே வெண்ணிலாவின் மாமாவும் போகிறார். அப்படி போனதும் வெண்ணிலா, பசுபதியை பார்த்து என்னுடைய வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி இருப்பதற்கு காரணம் நீங்க தான். உங்க பேச்சைக் கேட்டுக் கொண்டு விஜய் மீது வீண் பழி போட்டதனால் விஜய் என்னை விட்டு போய்விட்டார்.

உங்க பேச்சை கேட்டது தப்புதான் என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார். பசுபதியும் இந்த வெண்ணிலாவால் எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்ற கோபத்தில் அவரும் பதிலுக்கு சண்டை போடுகிறார். எப்படி இவர்கள் சண்டை போடும்போது அது கைகலப்பாக மாறிவிடுகிறது. இந்த சண்டைகள் எல்லாம் மொட்டை மாடியில் இருந்து நடக்கிறது. அப்பொழுது உச்சகட்ட கோபத்திற்கு ஆளான பசுபதி, வெண்ணிலாவை அடித்து விடுகிறார்.

உடனே வெண்ணிலா மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். ஆனால் பசுபதி காப்பாற்றாமல் வெண்ணிலா கையை விட்டு விடுவதால் வெண்ணிலா கதை முடிந்து விடுகிறது. ஆனால் தற்போது வெண்ணிலா விஜய்க்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் மூலம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் வெண்ணிலாவின் இறப்பிற்கு காரணம் விஜய் தான் என்று மொத்த பழியும் விஜய் மீது விழப் போகிறது.

இதையெல்லாம் பார்த்த வெண்ணிலவின் மாமாவும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மறுபடியும் பசுபதி பேச்சைக் கேட்டுக் கொண்டு சைலண்டாக தான் இருக்கிறார். இந்தப் பிரச்சினையில் இருந்து விஜயை மீண்டும் காப்பாற்ற போவது காவிரி தான்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.