கர்மா சும்மாவிடாது.. நடிகையிடம் 18 லட்சம் ஏமாற்றிய ராதிகா – Cinemapettai

Tamil Cinema News

Radhika : ராதிகா 80களில் கொடிகட்டி பறந்த நடிகையாக வளர்ந்து வந்தார். அதன் பிறகு இப்போதும் ஹீரோக்களுக்கு அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய், விஜய் சேதுபதி, விஷால் என பல நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுதவிர சின்னத்திரையிலும் ஒரு ரவுண்டு வந்தார். அவருடைய சித்தி, அண்ணாமலை, வாணி ராணி போன்ற பல தொடர்கள் சூப்பர் ஹிட் ஆனது. சன் டிவியில் தனது ராடான் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல தொடர்களை தயாரித்திருந்தார்.

அவ்வாறு கடந்த 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் சந்திரகுமாரி என்ற தொடரை தயாரித்து நடித்து வந்தார். அப்போது அந்தத் தொடர் சரியாக போகவில்லை. இதனால் 9.30 க்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொடரை 6:30 மணிக்கு மாற்றினார்கள்.

18 லட்சம் ஏமாற்றிய ராதிகா

அதோடு மட்டுமல்லாமல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை விஜி சந்திரசேகர் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது குறித்து சமீபத்தில் விஜி சந்திரசேகர் கூறுகையில் அந்த தொடரில் நடிக்க தனக்கு விருப்பமே இல்லை. கட்டாயப்படுத்தி தான் ராதிகா நடிக்க வைத்தார்.

அது கடைசி நாள் ஷூட்டிங் என்று நடிகர்கள் யாரும் வரவில்லை. அப்படியெல்லாம் இருக்காது எல்லோரும் வாருங்கள் என்று நான் தான் அழைத்துச் சென்றேன். ஆனால் இது கடைசி சூட்டிங் இதற்கு மேல் இந்த தொடர் முடிவு அடையப்போகிறது என்று அன்று தான் சொன்னார்கள்.

எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரில் நடித்ததற்கு எனக்கு 18 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறது. இப்போது ஆறு வருடத்திற்கு மேலாகியும் ராதிகா தனக்கு கொடுக்கவில்லை. கர்மா யாரையும் சும்மா விடாது. அந்த சீரியலில் நடித்து மனம் நொந்து விட்டேன் என்று விஜி கூறி இருக்கிறார்.

இப்போது விஜி சமீபத்தில் சூரி நடிப்பில் உருவான மாமன் படத்தில் நடித்திருந்தார். ராஜ்கிரனுக்கு மனைவியாக நடித்த நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் சமீபத்தில் மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் இறந்ததற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தையும் கூறியிருந்தார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.