இருட்டில் நடந்த டப்பிங்.. வெற்றிமாறன் இப்படியா, பிரபலம் கொடுத்த ஷாக் – Cinemapettai

Tamil Cinema News

Vetrimaaran: வெற்றிமாறன் படங்கள் எல்லாமே விருதுகளை வாங்கி குவித்து விடும். அந்த அளவுக்கு கதையில் தொடங்கி ஒவ்வொன்றும் உயிரோட்டமாக இருக்கும். இதுவே அவருடைய பிளஸ் பாயிண்ட்.

அதேபோல் அவர் கொஞ்சம் கெடுபிடியான ஆள் தான். நினைத்த மாதிரியே காட்சிகள் வரும் வரை எந்த ஆர்டிஸ்டையும் விட மாட்டார். நடிப்பில் மட்டுமல்ல டப்பிங்கிலும் இதே ரூல்ஸ் தான்.

அப்படித்தான் ஆடுகளம் பட டப்பிங்கில் நடந்த ஒரு விஷயத்தை சின்னத்திரை நடிகை தேவி பிரியா பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேச சென்றுள்ளார்.

இருட்டில் நடந்த டப்பிங்

அப்போது அதிகபட்ச கெட்ட வார்த்தைகள் இருந்திருக்கிறது. அதை பார்த்து அதிர்ந்து போன தேவி பிரியா இதையெல்லாம் பேச முடியாது என சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் வெற்றிமாறன் டப்பிங் தானே பேசுங்க என சொன்னாராம் இருந்தாலும் கூச்சப்பட்ட தேவி பிரியா அங்கு இருந்த லைட் எல்லாத்தையும் ஆப் செய்யச் சொன்னாராம்.

அதன் பிறகு தான் டப்பிங் பேசி முடித்திருக்கிறார். இதை தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள அவர் வெற்றிமாறன் சார் என்னுடைய கண்டிஷனுக்கு சரி என்று சொன்னார்.

அப்புறம்தான் என்னால் டப்பிங் பேசவே முடிந்தது. அந்த அளவுக்கு மோசமான வார்த்தைகள் அந்த கேரக்டர் பேசும் படியாக இருந்தது. இப்போதும் கூட அப்படி பேசியதை நினைத்தால் சங்கடமாக இருக்கு என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.