வீரா சீரியலில் டம்மியாக இருக்கும் விஜி.. மாறன் வீராவுக்கு ஐடியா கொடுத்த ராமச்சந்திரன் – Cinemapettai

Tamil Cinema News

Veera Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், வீரா மாறன் தனியாக இருக்கும் பட்சத்தில் சாப்பாடு கொடுக்கும் தள்ளுவண்டி பிசினஸ் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். மாறன் இதற்காக பணம் வேண்டும் என்பதற்காக அம்மா ஞாபகமாக வைத்திருந்த மோதிரத்தை அடகு வைத்து பணத்தை தயார் செய்து தள்ளுவண்டி கடையை போட்டு விட்டார்.

கடையும் எதிர்பார்த்த அளவுக்கு நல்லபடியாக துவங்க ஆரம்பித்தது. அப்பொழுது அங்கே வந்த ராமச்சந்திரன், பையன் சமைக்கும் உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் கடையில் வேலை பார்க்கும் ஒரு பையனை விட்டு மாறன் கடையில் பிரியாணி வாங்கிட்டு வர சொல்கிறார். அப்படி வந்ததும் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் வள்ளி அத்தை அங்கு வந்து ராமச்சந்திரன் சாப்பிடும் சாப்பாடு மாறன் கடையில் வாங்கினது என்று கண்டுபிடித்து மகன் சமைத்த சாப்பாட்டை சாப்பிடணும் என்று உனக்கு ஆசை வந்துவிட்டது. உனக்கு அவன் மீது கோபம் இருக்காது என்று எனக்கு தெரியும். அவன் வளர்ச்சியை கண்டு சந்தோஷப்படுற முதல் ஆள் நீயாக தான் இருப்பாய் என்று சொல்கிறார்.

ஆனால் இந்த வளர்ச்சியை பிடிக்காத கண்மணி, அந்த ஹோட்டலை இழுத்து மூடும் அளவிற்கு அவபெயரை உண்டாக்கி விட்டார். இதனால் துவண்டு போன மாறன் மற்றும் வீராவுக்கு ஐடியா கொடுக்கும் விதமாக ராமச்சந்திரன் சொன்னது என்னவென்றால் அவனுக்கு எந்த தொழில் நல்லா தெரியுமோ அந்த தொழில் செய்தால் போதும் என்று சொல்கிறார்.

இது புரியாத மாறனிடம் வீரா, உங்க அப்பா உன்னை துணிக்கடை பிசினஸை பண்ண சொல்கிறார் என்று சொல்கிறார். உடனே மாறனும் அப்பா சொன்ன ஐடியாவின் படி சைக்கிளில் புடவை விற்க ஆரம்பிக்கிறார். அடுத்ததாக விஜி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டில் டம்மி ஆகி கொண்டே இருக்கிறார். இதுவரை விஜிக்கு வள்ளி அத்தை ஓவராக சப்போர்ட் பண்ணி வந்தார்.

ஆனால் தற்போது வள்ளிக்கும் விஜி மீது சந்தேகம் வந்துவிட்டது. அத்துடன் சாமியின் உத்தரவும்படி கார்த்திக்கு ஏற்ற மனைவி பிருந்தா தான் என்று வள்ளியும் நம்ப ஆரம்பித்துவிட்டார். இதனால் விஜி அந்த வீட்டில் ஒரு செல்லா காசாக தான் இருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.