இனியாவிற்கு தெரிந்த உண்மை, சுதாகரிடம் நியாயம் கேட்கும் கோபி.. பாக்யாவுக்கு வந்த புது பிரச்சனை – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல், லோக்கல் கவுன்சிலர் பாக்யாவிடம் பிரச்சனை பண்ணியதால் பதவியில் இருந்து லோக்கல் கவுன்சிலரை அமைச்சர் தூக்கி விட்டார். இதனால் வெறிகொண்டு இருந்த லோக்கல் கவுன்சிலர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து பிரச்சினை பண்ணி, இனி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நான் கொடுக்கிற டார்ச்சரால் ரண வேதனை அனுபவிக்கப் போகிறீர்கள் என்று பிரச்சனை பண்ணிவிட்டு போய்விடுகிறார்.

ஆனாலும் எவ்வளவோ பிரச்சினையை பார்த்து விட்டோம் இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்பதற்கு ஏற்ப செல்விக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாக்கியம் தொடர்ந்து வெளியே பார்க்க ஆரம்பித்து விடுகிறார். அடுத்ததாக இனியா, மாமனார் சொன்னதை நினைத்து பார்க்கிறார். பிறகு சுதாகர் நிதிஷ் பேசிக் கொண்டிருப்பதையும் காது கொடுத்து கேட்கிறார்.

அப்பொழுது பாக்யாவின் முதல் ரெஸ்டாரன்ட் வாங்கியது சுதாகர் தான் என்று இனியாவிற்கு தெரிந்து விட்டது. இதைப் பற்றி சுதாகரிடம் இனிய கேட்ட பொழுது, எனக்கு நியாயமான விஷயத்தை தான் நான் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இதைப்பற்றி கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை, வழக்கு கொடுத்த வேலை என்ன, உங்க அம்மா ஆரம்பித்த சின்ன ஹோட்டலை மூட சொன்னேன்.

அதை பண்ணுவதற்கு நீ தயாராக இரு என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார். இதனால் கோவப்பட்ட இனியா வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் கேட்கிறார். பாக்கியாவும் எனக்குத் தெரியும் உன்னுடைய மாமனார் தான் என்னுடைய முதல் ரெஸ்டாரண்டை வாங்கினார் என்று. ஆனால் தற்போது அதெல்லாம் ஒரு பிரச்சினையில்லை உன்னுடைய வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் எனக்கு அது போதும் என்று சொல்லிவிடுகிறார்.

இதனை அடுத்து கோபியிடம் நடந்த உண்மையையும் சுதாகர் பற்றிய உண்மையான முகத்தையும் இனியா போட்டு உடைக்கிறார். ஆரம்பத்திலிருந்து எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருந்தது ஆனாலும் பாக்கிய சொல்வதை நான் நம்பாமல் மாமனார் சொன்னதை நான் நம்பி விட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று சொல்லி பீல் பண்ணுகிறார்.

அத்துடன் நான் கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு போகலாம் படிக்கலாம் என்று நீங்க சொன்னீங்க. ஆனால் இப்பொழுது என்னுடைய மாமனார் எதுவுமே பண்ண கூடாது வீட்டிலே சும்மா இருக்கணும் என்று சொல்கிறார். இதற்காக எனக்கு பிடிவாதமாக கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கோபி இடம் இனியா கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாத கோபி நான் உன் மாமனாரை சந்தித்து பேசுகிறேன் என்று சுதாகர் வீட்டுக்கு போகிறார்.

அப்படி போனதும் சுதாகரிடம் கோபி கேள்வி கேட்கிறார். ஆனால் சுதாகர் இந்த விஷயத்தை எப்படியாவது பேசி சமாளிக்கும் விதமாக பேசி கோபியை ஏமாற்றி விடுவார். இப்பொழுது தான் கோபிக்கு உண்மையிலேயே பாக்கியாவின் நிலைமை என்னவென்று புரிகிறது. அந்த வகையில் இனி பாக்யாவுக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்து வருவார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.