ஏமாற்றத்தை கொடுக்கும் இயக்குனர்கள்.. ஷங்கருக்கு போட்டியாக இறங்கிய மணிரத்னம் – Cinemapettai

Tamil Cinema News

Mani Ratnam : இப்படி ஒரு அருமையான படத்தை கொடுக்க முடியுமா என யோசிக்க வைத்த இயக்குனர்கள் இப்போது எதிர்பார்க்காத தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்து வருகிறது.

இப்போது நெல்சன், லோகேஷ் கனகராஜ், அட்லீ, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இளம் இயக்குனர்களின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது உள்ள ட்ரெண்ட் செட்டுக்கு ஏற்றார் போல் படங்களை அவர்கள் எடுத்து வருகிறார்கள்.

ஆனால் பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர்கள் இப்போது தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர் தோல்வி படங்களை கொடுத்திருந்தார். அவருக்கு போட்டியாக இப்போது மணிரத்னம் இறங்கி இருக்கிறார்.

ஷங்கரை போல் தோல்வி படம் கொடுக்கும் மணிரத்னம்

அதாவது பொன்னியின் செல்வன் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த மணிரத்னம் தக் லைஃப் படத்தின் மூலம் விமர்சனத்தை சந்தித்திருக்கிறார். இது மணிரத்னத்தின் டைரக்ஷனா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மொக்கையாக எடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் கௌதம் மேனன் படங்கள் தோல்வி பெற்ற நிலையில் அவர் நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் தர்பார் மூலம் தோல்வி படத்தை கொடுத்தார். இப்போது சிவகார்த்திகேயனின் மதராசி படத்தை எடுத்து வரும் நிலையில் அந்த படம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

இதேபோல் ஏஎல் விஜய், லிங்குசாமி, செல்வராகவன், கே எஸ் ரவிக்குமார் போன்ற இயக்குனர்கள் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் இப்போது அவுடேட்டான இயக்குனர்கள் என்ற விமர்சனங்கள் வர தொடங்கி விட்டது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.