தலைவர் ஹாப்பி அண்ணாச்சி.. லோகேஷுக்கு காத்திருக்கும் காஸ்ட்லி கிப்ட் – Cinemapettai

Tamil Cinema News

Lokesh Kanagaraj : வெற்றி இயக்குனராக வளம் வந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் சற்று சருக்களை சந்தித்தார். ஆனாலும் அந்த படத்தின் விமர்சனங்களை லோகேஷ் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது.

அவ்வாறு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கூலி. அவ்வபோது இந்தப் படத்தின் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.

மேலும் இப்போதே பல கோடிக்கு கூலி படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை விற்று உள்ளது. இந்நிலையில் கூலி படத்தை இப்போது ரஜினி பார்த்துள்ளாராம். படம் அருமையாக வந்துள்ளதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார்.

லோகேஷுக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுக்க போகும் ரஜினி

இதனால் லோகேஷுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு காஸ்ட்லி கிப்ட் கொடுக்க உள்ளாராம். ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனால் சன் பிக்சர்ஸ் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கியது.

குறிப்பாக ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலை மதிப்பு மிக்க கார்களை பரிசாக வழங்கி இருந்தார். அதேபோன்று தலைவர் கூலி படத்தை பார்த்த மகிழ்ச்சியில் லோகேஷுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்க இருக்கிறார்.

மேலும் கூலி படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருக்கிறார். இதை தொடர்ந்து இப்போது நெல்சனின் ஜெயிலர் 2 படத்திலும் ரஜினி பிசியாக இருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.