சிங்கப்பெண்ணில் ஆனந்தியை நெருக்கும் ஆதாரம்.. குட்டையை குழப்பும் மித்ரா! – Cinemapettai

Tamil Cinema News

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருப்பது அன்பு அல்லது மகேஷ் யாராவது ஒருவருக்கு தெரிந்தால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். இதற்கான வழியையும் துளசி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாள்.

கம்பெனியில் எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனை எடுப்பது போல் ஆனந்தியின் ரத்த மாதிரி சேகரித்து விடுகிறார்கள். இதனால் தான் கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிந்து விடுமோ என ஆனந்தி பதறுகிறாள்.

ஆனந்தியை நெருக்கும் ஆதாரம்

அன்புவிடம் எவ்வளவு கெஞ்சியும் அன்பு இந்த விஷயத்தில் ஆனந்திக்கு இரக்கம் பார்ப்பதாக இல்லை. நாளைய எபிசோடில் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு கம்பெனிக்கு வருவது போல் காட்டப்படுகிறது.

அதே நேரத்தில் ஆனந்தியின் தோழி காயத்ரி இந்த முடிவு கம்பெனியில் யார் கையிலும் கிடைக்காதவாறு முயற்சி செய்கிறாள்.

இன்னொரு பக்கம் மித்ரா இந்த பரிசோதனை அறிக்கை வெளியானால் மகேஷ் மாட்டிக்கொள்வான் என பயப்படுகிறாள்.

இவர்கள் இருவரும் போடும் திட்டத்தில் ஏதோ ஒரு வகையில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரியாமல் போகப் போகிறது. இந்த வாய்ப்பு தவறும் பட்சத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை அன்பு அல்லது மகேஷ் எப்படி தெரிந்து கொள்கிறார்கள் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.