Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. அந்த வகையில் 1450 எபிசோடு ஆகியதால் இந்த வாரத்திலேயே பாக்கியா சீரியலை முடிப்பதற்கு இறுதி அத்தியாயத்தை கொண்டுவர விஜய்டிவி தயாராகிவிட்டது. இந்த ஒரு விஷயத்தை கேட்கவே மனசு குளு குளு என்று இருக்கிறது என்று மக்கள் கமெண்ட்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு கதையே இல்லாமல் அரச்ச மாவை அரைத்து பார்ப்பவர்களை போரடிக்க வைத்து விட்டது. இந்த சூழ்நிலையில் இனியா வாழ்க்கையை சூனியம் ஆக்கிய சுதாகர் குடும்பத்திலிருந்து இனிய தப்பிக்கும் விதமாக விவாகரத்துக்கு தயாராகி விட்டார். ஆனால் நித்தேஷ் இனியாவுக்கு போன் பண்ணி தனியாக வரச் சொல்லி உன்னிடம் பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார்.
இனியாவும் நித்தேஷை பார்க்க போன இடத்தில் ஆகாசையும் இனியாவையும் சேர்த்து வைத்து நித்தேஸ் மோசமாக நடந்திருக்கிறார். இதனால் கோபப்பட்ட இனியா அந்த இடத்திலிருந்து கிளம்பும் பொழுது இனியாவை போகவிடாமல் நித்தேஷ் பிடித்திருக்கிறார். உடனே இனியா, நித்திசை தள்ளிவிட்டு கிளம்ப முயற்சி எடுத்து இருக்கிறார். ஆனால் கீழே விழுந்த நித்தேஷ் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததே பார்த்து இனியா பயந்து போய்விட்டார்.
உடனே நித்தீஷ் பக்கத்தில் போய் உயிர் இருக்கிறதா என்று இனியா செக் பண்ணி பார்க்கிறார். அப்பொழுது நிதேஷ்க்கு மூச்சு இல்லை என்று இனியா அதிர்ச்சியாகிவிட்டார். ஆனாலும் நித்தேஷுக்கு எதுவும் ஆகாது, இந்த பிரச்சனையும் பெருசாக போகாதபடி இனியா எஸ்கேப் ஆகி விடுவார்.
கடைசியில் சந்தோஷமாக ஒட்டுமொத்த குடும்பத்துடன் இனிய இருக்கும் படி இறுதி அத்தியாயத்துடன் பாக்யா சீரியல் முடிவடைகிறது. இத்தனை வருஷமாக பயணித்த மொத்த டீமுக்கும் இயக்குனர் பெரிய பூசணிக்காய் வாங்கி உடைத்து விடை கொடுத்து விட்டார்.