News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

Recent posts

#11
ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு
#12
Ungal Ragangal / casino management online i186k...
Last post by Arielwaddy - Jan 08, 2026, 10:11 PM
 
Thanks a lot! Wonderful stuff!
biggest casino in canada https://bhcmerced.org/canadian-casino-online/  canadian casino
#13
நீ என் வாழ்வின் அவசியம் அல்ல,
ஆனால்
அதை அழகாக மாற்றும் அமைதி.
நீ இல்லையென்றால்
வாழ்க்கை நின்றுவிடாது,
ஆனால்
நீ இருப்பதால்
அது மெதுவாக சிரிக்கிறது.
உலகம் பார்க்கும் காட்சிகள் வேறு,
நான் உன்னுள்
ஒரு நம்பிக்கையைப் பார்த்தேன்—
அதற்கு பெயர் வைக்கவில்லை,
அது இருந்தால் போதும்.
என் இதயம் தனியாக நடந்த பாதையில்,
உன் பார்வை
ஒரு சரியான திசையை காட்டியது.
கைபிடித்த தருணம் விதி அல்ல,
புரிதல்.
உன் வார்த்தைகள் சத்தமாக இல்லை,
ஆனால்
அவை உள்ளுக்குள் அமைதியை விதைக்கின்றன.
நீ நட்சத்திரமல்ல,
என்னை வழிநடத்தும் ஒளி மட்டும்.
நான் விழுந்தால் பிடிக்க
எப்போதும் அருகில் நிற்கும் விளக்கு.
இந்த உறவு
உடலின் தேவை அல்ல,
மனத்தின் ஒப்புதல்.
நீ என் பாதையில் நடக்கிறாய்,
நான் என் பாதையை மறக்கவில்லை.
இரண்டு வழிகள் சந்திக்கும் இடத்தில்
இந்தப் பந்தம் நிற்கிறது.
நீ என் அடைக்கலம் அல்ல,
நானும் எனக்கே போதும்.
ஆனால்
உன் இருப்பு
என் வாழ்க்கையை
சிறிது நன்றாக மாற்றுகிறது.
#14
கல்லூரியின் இறுதி நாட்கள்
கனவுகளால் அல்ல,
கேள்விகளால் கனிந்தன,
"இனி என்ன?"
என்ற ஒரே சொல்
எங்கள் மௌனத்தை
நிரப்பியது.

மேற்படிப்பா?
வேலைவாய்ப்பா?
எதிர்காலம்
இரு பாதைகளாக
பிரிந்த நொடியில்,
காதல் மட்டும்
ஒரே இடத்தில் நின்றது.

நீ தேர்ந்தெடுத்தாய்
உழைப்பின் பாதை,
நான் தேர்ந்தெடுத்தேன்
ஆபத்தும் நம்பிக்கையும்
கலந்த தொழில் வழி.

அன்று தான் உணர்ந்தோம்—
ஒரே கனவு
ஒரே வாழ்க்கை ஆகாது,
ஆனால்
ஒரே காதல்
பல வாழ்க்கைகளையும்
தாங்கும் என்று.

இந்த முடிவு
நம்மை பிரிக்கும் என்று
நாங்கள் அறிந்திருந்தோம்,
அதனால் தான்
அது
எங்களுக்கு
அதிக வலியாய் இருந்தது.

பாதைகள் வேறானாலும்
பார்வைகள்
ஒரே திசை,
நம்பிக்கைகள் வேறானாலும்
இதயத் துடிப்பு
ஒரே மொழி.

நீ வேலைக்காக
வாழ்க்கையை வடிவமைத்தாய்,
நான் கனவுக்காக
வாழ்க்கையை சூதாட்டமிட்டேன்.

உலகம் சொன்னது—
"நீங்கள் இருவரும்
வேறுபடுகிறீர்கள்" என்று,
நாங்கள் சொன்னோம்—
"ஆம்,
ஆனால்
விலகவில்லை" என்று.

ஒருவருக்கொருவர்
தோள் கொடுத்தோம்,
கை பிடிக்காமல்,
ஏனெனில்
இனி காதல்
பிடிப்பில் இல்லை,
நம்பிக்கையில்.

நீ உயர்ந்தால்
நான் பெருமை கொண்டேன்,
நான் விழுந்தால்
நீ குரல் கொடுத்தாய்.

என் தோல்விகளை
என் கனவுகளாக
மாற்றினாய்,
உன் சோர்வுகளை
நான்
மௌனத்தில் தாங்கினேன்.

இனி
ஒவ்வொரு நாளும்
ஒரே இடம் இல்லை,
ஆனால்
ஒவ்வொரு முடிவிலும்
ஒரே நினைவு.

நாம் சேர்ந்து
வாழ்வோமா
என்று தெரியாது,
ஆனால்
நாம் சேர்ந்து
வளர்ந்தோம்
என்று உறுதி.

இது தான்
காதலின் உயர்ந்த வடிவம்—
எதிர்காலத்தை
ஒருவரிடமிருந்து
பறிக்காமல்,
ஒருவருக்கொருவர்
விடுதலை கொடுப்பது.

உன்னை இழக்காமல்
உன்னை விடுவது,
என்னை மறக்காமல்
என் பாதையை
நடப்பது.

நாங்கள் பிரிந்தோம்
நேரத்தில் மட்டும்,
உயிரில் அல்ல.

இன்றும்
நீ வேலைக்குச் செல்லும் போது
என் வாழ்த்துகள்
உன் நிழலாய் வரும்,
நான் தொழிலில்
தடுமாறும் போது
உன் நம்பிக்கை
என் தாய்மொழி.

உலகம் எதை கேட்டாலும்
நாங்கள் ஒன்றை மட்டும்
விடவில்லை—
ஒருவரை ஒருவர்
நம்புவதை.

இது
பிரிவு அல்ல,
இது
இரு பாதைகளில்
நடக்கும்
ஒரே காதல்.

நேரம் எங்களை
முழுமையாக பிரித்தாலும்,
இந்த உண்மை
என்றும் மாறாது—

நாங்கள்
ஒருவருக்கொருவர்
சேர்ந்தவர்கள் அல்ல,
ஒருவருக்கொருவர்
உயிர் கொடுத்தவர்கள்

Epic கிறுக்கல் ✍️
#15
தினம் ஒரு குட்டிக்கதை :--
ஒரு ஊருல, ஒரு ராஜா!
****************************
ஒரு நகரத்தில் ஒரு சட்டமிருந்தது.

அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு மன்னனாக வரமுடியும்.
ஆனால்,

அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!

ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே அந்த மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.
வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!

மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.

இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர் எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு.

அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு...

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.

மக்கள் வாயைப் பிளந்தனர. ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான்.

 ''மன்னன் செல்லும் படகா இது!
பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!
நான் நின்று கொண்டா செல்வது!சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன!

சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே!

காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை.

அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான. படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்.

''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா!
நான் என்ன செய்தேன் தெரியுமா?

ஆட்சிக்கு வந்த 'ஓராண்டு' முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

'இரண்டாமாண்டு' முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

'மூன்றாமாண்டு' முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர்.

இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

'நான்காம்' ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது.

இந்த 1000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!

 வாழப் போகின்றேன்!
அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!

உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் "வெற்றிக்குக் காரணங்கள் யாவை?"
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

'ஒன்று:' ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

'இரண்டு:' அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை,

 'ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!'

'சிந்தனைத் திறனும் திட்டமிட்டு செயல் புரிதலும்'
ஒருவரிடம் அமைந்தால் அவரால் எதையும் சாதிக்கமுடியும் !'
நாம் நினைத்தால், முயற்சி செய்து உழைத்தால் சாதிக்க  முடியும்

வானம் தொட்டுவிடும் தூரமே...!

-பகிர்வு பதிவு.
🌹🌹🌹🌹🌹🌹
#16
படித்து பகிர்ந்து 🔥 🔥 🌹
கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ..!

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும்
   நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு
    முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட,
உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம்,
தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும்
கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல்
ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை
  சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு
  ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
நன்றாக பசி இருந்தும் கட்டளை
வரும் வரை காத்து இருத்தல்,
  நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன
  இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நான் சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!
#17
ஒரு வார்த்தை கூட இல்லாமல் பிரிந்தேனே, என் இதயம் இன்னும் உன் வழியை தேடுகிறது. நினைவுகள் மட்டும் தான் மீதமிருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒரு கண்ணீரில் சுருங்குகின்றன.
#18
மௌனத்தில் கூட நாம் பேசிக்கொள்கிறோம், அமைதியே நம் காதலின் மொழி. ஒரு பார்வை போதும் புரிந்துகொள்வதற்கு, மனங்கள் ஒன்றாக இசைகிறது.
#19
கண்ணின் வழி வந்த காதல், மொழியில்லாமல் செதுக்கிய கவிதை. நாள் முழுதும் நினைவோடு, என் கண்கள் உன்னையே தேடுகின்றன.
#20
உன் விழியோடு எனது மனம் பேசினது, ஒரு பார்வையில் என் உயிர் நிலைத்தது. ஓரமாய் நின்றாய் நீ, என் உலகமாய் மாறினாய்.