விஜய் மீது அவதூறு பரப்பும் சோசியல் மீடியா.. லியோ படத்தில் 35 லட்சம் Scam – Cinemapettai

Tamil Cinema News

லியோ படத்தில் நடனம் ஆடிய டான்சர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காமல் 35 லட்ச ரூபாய் வரை Scam நடந்துள்ளதாக பரபரப்பான செய்தி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் தினேஷ் மாஸ்டர் தான் என்று டான்சர் அபர்ணா மீடியா முன்பு ஓப்பனாக பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க இதற்கு காரணம் தளபதி விஜய் என்று சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அவதூறுகளை எதிர்க்கட்சி மற்றும் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். நேற்றுடன் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்று முதல் முழு அரசியல்வாதியாக களமிறங்கி உள்ள விஜய்க்கு இது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

நேற்று நடந்த கூட்டத்தில் நியாயம் கேட்க வந்தவர்களை தினேஷ் மாஸ்டர் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் கெட்ட வார்த்தையில் பேசி துரத்தி உள்ளதாகவும்,  மீடியா முன்பு ஆபாசமான வார்த்தைகளை சொல்லி திட்டி உள்ளதாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

இதை ஒரு காரணமாக வைத்து சோசியல் மீடியாவில் விஜய்-யும் இதற்கு பதில் அளிக்காமல் இருந்தால் அவர் துறையில் அவரே சரியில்லை அரசியலில் மட்டும் எப்படி மக்களை காப்பாற்றுவார் என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். எல்லா வீடியோக்களிலும் லியோ படத்தின் புகைப்படத்தை தினேஷ் மாஸ்டருடன் வைத்துள்ளனர். தினேஷ் மாஸ்டர் விஜய்-யின் தீவிர ரசிகர் என்பது உலகம் அறிந்தது தான்.

இதுபோன்ற சம்பவங்களுக்கு விஜய் எப்படி பொறுப்பாவார் என்பது தெரியவில்லை. அவர் கட்சியிலிருந்து யாராவது ஒருவர் விளக்கம் கொடுத்தால் மட்டுமே ஒரு தெளிவான விடை கிடைக்கும்.  இப்படி சாதாரண ஒரு பிரச்சினையை அவர் மீது திருப்பி அரசியல் கால் புணர்ச்சியில் செயல்படும் சில சோசியல் மீடியா விஷமிகளை நம்ப வேண்டாம் என்பது தான் நிதர்சனமான உண்மை

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.