கை கொடுக்காமல் கண்ணை மூடி இருக்கும் கூட்டாளிகள்.. சினிமாவாதி கமலஹாசனை கொண்டாடும் அரசியல் – Cinemapettai

Tamil Cinema News

ஒரே மேடையில் இரண்டு மாநிலங்களுக்கு இடையே கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது கமலஹாசனின் ஆணித்தனமான பதிவு. கடைசி வரை மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற உறுதியில் இருக்கும் கமலஹாசனின் Thuglife படம் கர்நாடகாவில் வெளியிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதனால் அடுத்தடுத்து வெளிவர உள்ள கே ஜி எஃப் – 3, காந்தாரா – 2 மற்றும் KVN தயாரிப்பில் உருவாகியுள்ள விஜய்-யின் ஜனநாயகன் படம் முதற்கொண்டு தமிழ்நாட்டில் வெளியிடப் போவதில்லை என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நாளை வெளியாக உள்ள Thuglife படத்திற்கு Booking பார்க்கும் போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிடவில்லை என்றால் 20 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம் இருப்பினும் கமல் இறங்கி வர மாதிரி தெரியல. இப்படி கடும் எதிர்ப்புகள் இருக்கும் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தற்போது அரசியல் களத்தில் அறிக்கைவிட்டு பேசி வரும் விஜய், சூர்யா, அஜித் மற்றும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு முதற்கொண்டு வாயை திறக்கவில்லை என்பது இன்னும் வருத்தம் அளிக்கிறது.

கமலஹாசனுக்கு தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் முக்கியமாக சீமான், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், திமுகவில் முக்கிய புள்ளிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சினிமா நடிகர்கள் மூத்த நடிகர்கள் யாருமே வாயை திறக்கவில்லை என்பதே சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

விஜய் இன்று முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை சந்தித்து பரிசுகளை வழங்க உள்ளார். அந்த மேடையிலாவது வாய் திறப்பாரா என்று காத்துக் கொண்டிருக்கின்றனர் பல அரசியல் புள்ளிகள். மன்னிப்பு கேட்காமலேயே கர்நாடகா தரப்பில் இருந்து இறங்கி வந்தால் மட்டுமே இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் Thuglife படம் வெளியிட வாய்ப்பு உள்ளது.

அப்படி இல்லை என்றால் இந்த பிரச்சனை இன்னும் நீண்டு கொண்டே தான் போகும் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நட்பு முறிவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது திமுகவில் இணைந்துள்ள கமலஹாசனுக்கு விரைவில் போஸ்டிங் கொடுக்க உள்ளனர், தலைவர் ஸ்டாலின் சுமூகமாக பேசிக் கூட இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.