விபரீத முடிவை எடுத்த மீனாவின் தங்கை.. ஆத்திரத்தில் அருணை அடித்த முத்து – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா பிடிவாதமாக சீதாவுக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முத்துவிடம் வாக்குவாதம் பண்ணுகிறார். இதனால் மீனா தன் பேச்சைக் கேட்க மாட்டுகிறார் என்ற வருத்தத்தில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். வந்ததும் விஜயாவிடம் சென்டிமென்டாக பேசி, நீ அப்பா பேச்சை மீறி இதுவரை எதையும் செய்ததில்லை.

ஆனால் என்னுடைய பொண்டாட்டி நான் சொல்வதை கேட்காமல் இஷ்டத்துக்கு செய்கிறாள் என்று வாய்க்கு வந்தபடி உலர ஆரம்பித்து விட்டார். அண்ணாமலையும் நீ திருந்தவே மாட்டாய் என்று விஜயாவை கூட்டிட்டு உள்ளே போய் விடுகிறார். ஆனாலும் முத்து குடித்துவிட்டு வீட்டுக்குள்ளே புலம்பிய நிலையில் மீனா மொட்டமாடிக்கு தூங்க போய் விடுகிறார்.

அப்பொழுது அங்கே வந்த மனோஜ் என்ன ஆச்சு உன்னுடைய பேச்சு ரொம்ப ஓவராக போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு முத்து, சீதாவுக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று மீனா எடுத்த முடிவு எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார். உடனே மனோஜ் இதை தவறாக புரிந்து கொண்டு சீதாவையும் கல்யாணம் பண்ணிக் கொள்ள உனக்கு ஆசை இருக்கிறதா என்று கேட்கிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட முத்து, மனோஜை ஓங்கி அடித்து விடுகிறார். அடுத்ததாக அண்ணாமலை, மீனாவிடம் உனக்கும் முத்துவுக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்பொழுது மீனா, சீதா டிராபிக் போலீஸ் அருணை காதலிக்கிறார். ஆனால் அந்த அருண் வேண்டாம் என்று உங்க பையன் பிடிவாதமாக சொல்கிறார். ஏற்கனவே அருணுக்கும் உங்க பையனுக்கும் சண்டை வந்து நிறைய இடத்தில் மோதி இருக்கிறார்கள்.

சீதாவின் ஆசை நிராசையாக போய்க் கொண்டிருக்கிறது. சீதாவுக்கு அருண் ரொம்ப பிடித்திருக்கிறது, இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் நான் முழித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் தாண்டி சீதா, அருணை மறக்க முடியாமல் விபரீத முடிவை எடுக்கும் விதமாக விஷம் குடித்து விடுகிறார். உடனே வீட்டில் இருப்பவர்கள் சீதாவை ஹாஸ்பிடலுக்கு கொண்டுட்டு வந்து விடுகிறார்கள்.

அப்படி சீதாவுக்கு ட்ரீட்மென்ட் முடிந்த நிலையில் அங்கே அருண் வந்து மருந்து மாத்திரை எல்லாம் வாங்கிட்டு வருகிறார். அந்த ஆஸ்பத்திரியில் சீதாவின் அம்மா, மீனா, அருண் அம்மா, சத்யா என அனைவரும் இருக்கிறார்கள். முத்து அங்கு வந்த நிலையில் அருணை பார்த்து கோபப்பட்டு மருந்து வேண்டுமென்றால் என்னிடம் சொல்லி இருக்க வேண்டியது தானே.

எதற்கு கண்டவனை எல்லாம் வாங்கிட்டு வரச் சொல்கிறீர்கள் என்று முத்து கோபமாக கேட்கிறார். உடனே அருண் நான் ஒன்னும் கண்டவன் இல்ல, சீதாவை காதலிக்கும் காதலன். உன்னுடைய பிடிவாதத்திற்காக சீதாவின் வாழ்க்கையே வீணாக்குகிறாய் என்று திட்டுகிறார். இதனால் கோபம் அடைந்த முத்து அருணை அடிப்பதற்கு தயாராகி விட்டார். இதை எல்லாம் பார்த்த சீதா, முத்துவை திட்டினால் தான் முத்துவின் அறிவுக்கு எட்டும்.

அப்பொழுதுதான் ஓவராக ஆடும் முத்துவின் கொட்டமும் அடங்கும். மீனாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் முத்துக்கு அதிகமாக இடம் கொடுப்பதால் தான் முத்து ஓவராக துள்ளுகிறார். தற்போது ரோகிணியை விட இந்த முத்துவை பார்க்கும் பொழுது தான் எரிச்சலாக இருக்கிறது என்று இந்த நாடகத்தை விரும்பி பார்த்தவர்கள் நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.