சீரியல் மூலம் உச்சாணி கொம்புக்கு போன 3 கதாநாயகன்.. காரியத்தை கெடுத்து சொதப்பிய சன் டிவி – Cinemapettai

Tamil Cinema News

Sun Tv Serial: சீரியலுக்கு ராஜாவாக இருக்கும் சன் டிவி சேனல் கிட்டத்தட்ட 18 சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதில் ஏதாவது ஒரு சான்ஸ் கிடைத்தால் போதும் அதன் மூலம் நாம் பெரியாளாகிவிடலாம் என்று கனவுடன் பல கலைஞர்கள் போராடி வருகிறார்கள். அப்படி சன் டிவி சீரியல் மூலம் வாய்ப்பு கிடைத்த பலரும் பிரபலமாகி தற்போது அவர்களுக்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.

இந்த வரிசையில் இப்போது மூன்று கதாநாயகன்கள் உச்சாணிக்கொம்பில் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்றால் சிங்க பெண்ணே சீரியல் மூலம் பிரபலமாகி இருக்கும் அன்பு கேரக்டரில் நடிக்கும் அமல்ஜீத், மகேஷ் கேரக்டரில் நடிக்கும் தர்ஷன் கௌடா. இவர்கள் இரண்டு பேருமே சன் டிவிக்கு புதுமுக நாயகனாக அடி எடுத்து வைத்தார்கள்.

ஆனால் இவர்கள் இருவரும் இதற்கு முன் மற்ற சேனல்களில் நடித்திருக்கிறார்கள். அப்பொழுது இவர்களுக்கு கிடைத்த ரசிகர்களை விட சன் டிவி சீரியலில் நடித்த பிறகு சின்னதிரையின் நாயகனாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை போல் மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா கேரக்டரில் நடிக்கும் நியாஷ்கான் அவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

இதற்கு முன் ஜீ தமிழில் இவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆனால் அப்பொழுது கிடைக்காத வரவேற்கும் மரியாதையும் சன் டிவியில் நுழைந்த பிறகு இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்த இந்த மூன்று நாயகனும் தொடர்ந்து அந்த அன்பை தக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். ஏனென்றால் கதை கொஞ்சம் தடுமாறி வருவதாலும் எதிர்பார்த்தபடி நகராமல் இருப்பதாலும் கொஞ்சம் சரிவை சந்தித்து இருக்கிறது.

முக்கியமாக மூன்று முடிச்சு சீரியல் சூர்யா நடிக்கும் கதாபாத்திரம் எப்பொழுதும் குடித்துக் கொண்டே நிதானம் இல்லாமல் இருக்கும் ஒரு கேரக்டர். சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை கிட்டத்தட்ட 200 எபிசோடு தாண்டி இருக்கிறது. ஆனால் இந்த 200 எபிசோடிலும் சூர்யா தினமும் குறித்து விட்டு அம்மாவை வெறுப்பேற்றுவதற்கு நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்துவது மட்டுமே வருவதால் பார்ப்பதற்கு எரிச்சல் ஆகிவிட்டது.

இப்பொழுது கூட நந்தினியை வீட்டை விட்டு போ என்று சொன்ன சூர்யா திரும்பப் போகக்கூடாது என்று தன்னை தன்னை காயப்படுத்தி கொண்டார். இதை பார்க்கும் பொழுது நந்தினி மீது உண்மையிலேயே சூர்யாவுக்கு காதல் வந்து இருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவும் சூர்யாவின் அப்பா சொன்னதற்காகத்தான் சூர்யா இந்த மாதிரி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் என்பது தெரிந்த பிறகு நந்தினிக்கு மட்டுமல்ல பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது.

அதனால் கதையே சொதப்பிக்கொண்டு வரும் இந்த இயக்குனர்களிடம் சன் டிவி சேனல் தரப்பில் இருந்து வார்னிங் கொடுத்து சீரியலுக்கு ஏற்ற மாதிரி கதையை கொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.