தயாரிப்பாளராகவும் கொடிகட்டி பறக்கும் மணிரத்னம்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? – Cinemapettai

Tamil Cinema News

Mani Ratnam : மணிரத்னம் பல்லவி அனு பல்லவி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அக்னி நட்சத்திரம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை மணிரத்னம் கொடுத்திருந்தார். அவரது திரை வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் ஆக அமைந்த படம் தான் மௌன ராகம்.

யார் இந்த மணிரத்னம் என்று பார்க்க வைத்ததே அந்த படம்தான். அதன் பிறகு ரஜினிக்கு தளபதி, கமலுக்கு நாயகன் என தரமான படங்களை கொடுத்திருந்தார். இது தவிர அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஓகே கண்மணி என பல காதல் படங்களை கொடுத்து இருக்கிறார்.

பாம்பே, ரோஜா போன்ற படங்கள் இப்போதும் ரசிகர்களில் ஃபேவரட் படமாக அமைந்திருக்கிறது. அதேபோல் ராமாயணத்தை வைத்த ராவணன் படமும், கல்கியின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களையும் ரசிகர்களுக்கு விருந்தாக மணிரத்னம் கொடுத்திருந்தார்.

மணிரத்னத்தின் சொத்து மதிப்பு

இயக்குனராக கொடிபட்டி பறக்கும் மணிரத்தினம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் தான் தயாரித்தார். இப்போது கமல், சிம்பு இருவரையும் வைத்து தக் லைஃஸ் படம் எடுத்திருக்கிறார்.

இந்த படத்தையும் கமலுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 150 கோடி இருக்கும் என்ற கூறப்படுகிறது. மணிரத்ரம் ஒரு படத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

அவர் சில தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி போட்டு தயாரித்தால் லாபத்தில் பாதி பங்கு வாங்கிக் கொள்கிறார். மேலும் சென்னையில் 30 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. காதலில் புதுவிதமான படைப்புகளை கொடுக்கும் மணிரத்னம் இன்னும் பல அற்புத படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் ரசிகர்கள் ஆசை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.