ஐபிஎல் முதல் 4 இடங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்.. மொத்தமாய் மூட்டையை கட்டிய சாய் சுதர்சன் – Cinemapettai

Tamil Cinema News

2025 ஐபிஎல் போட்டி தொடர் முடிவடைந்தது. வெற்றிகரமாக 18 வருடங்கள் போராடி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளது பெங்களூர் அணி. அந்த அணிக்கு ரஜித் படிதார் கேப்டனாக செயல்பட்டார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் நேற்று கொண்டாட்டங்களால் கலை கட்டியது.

பெங்களூர் அணி: இந்த தொடரில் முதல் இடத்தை பிடித்த பெங்களூர் அணிக்கு 20 கோடிகள் பரிசாக வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இந்த அணியை கட்டமைத்தவர் விஜய் மல்லையா. இப்பொழுது இந்த வெற்றியை கொண்டாட அவர் இல்லை.

பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து 12.5 கோடிகள் பரிசுத்தொகையை வென்றது . இந்த அணியின் ஓனராக ப்ரீத்தி ஜிந்தா இருந்து வருகிறார். அவரும் வீரர்களுக்கு பல பரிசுகளை கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மும்பை இந்தியன்ஸ்: குவாலிபயர் 2 போட்டியோடு வெளியில் வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 7 கோடிகள் கிடைத்தது. அதுபோக அம்பானியும் வீரர்களை செமையாக கவனித்துள்ளார். எல்லா போட்டிகளிலும் நீடா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி இருவரும் கலந்து கொண்டனர்.

குஜராத் டைட்டன்ஸ்: சுபம் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த அணிக்கு பரிசுத்தொகையாக 6.5 கோடிகள் கிடைத்தது.2022ஆம் ஆண்டு இவர்கள் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பெரிய விருதுகளை தாண்டி மேன் ஆஃப் தி சீரிஸ் ஆரஞ்சு தொப்பி சாய் சுதர்சனுக்கும், மோஸ்ட் வேலியபிள் பிளேயர் சூரியகுமார் யாதவிற்கும், அதிக விக்கெட் எடுத்து பர்பில் தொப்பி வாங்கிய பிரசித் கிருஷ்ணாவிற்கும், Fair play அவார்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய்கள் கொடுத்தனர். இதில் சாய் சுதர்சனுக்கு வளர்ந்து வரும் வீரர் விருதும், என மொத்தமாய் அவர் 30 லட்சம் வாங்கினார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.