500 எபிசோடை தாண்டிய விஜய் டிவியின் ஹிட் சீரியல்.. ஒன்றாக இணைந்த குடும்பம் – Cinemapettai

Tamil Cinema News

Serial: சீரியல் என்றாலே அதை பல வருஷமாக இழுத்தெடுத்து எபிசோடுகளை அதிகமாக கொண்டு வருவது தான் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கிடைக்கும். அப்படி விஜய் டிவி சீரியல் ஒன்று தற்போது 500 வது எபிசோடை தொட்டிருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றிணைந்து கேக் வெட்டி சந்தோஷத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இந்த சீரியல் தான் இந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் பிடித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமாக தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 500 எபிசோடு தாண்டி இருக்கிறது. பொறுப்பான அப்பாவின் வளர்ப்பும், பசங்களுடன் கண்டிப்பாக இருக்கும் பாண்டியனின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது.

அத்துடன் இந்த நாடகத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்தது மருமகள்கள் தான். அந்த வகையில் மீனா ராஜி மற்றும் தங்கமயில் மூன்று பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சலிச்சவங்க இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடிப்பே பிரமாதமாக கொடுத்து வருகிறார்கள். அதிலும் ராஜி கதிர் ஜோடி மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது.

வீட்டிற்கு மூத்த மருமகளை விட மீனாவின் பாசமும் அக்கறையும் பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. முக்கியமாக இதில் மாமியார்தான் ஹைலைட் என்று சொல்லும் அளவிற்கு கோமதியின் நடிப்பும் பாசமும் பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைத்தது. இப்படி எல்லா பாசிட்டிவும் அமைந்த நிலையில் தற்போது அரசியின் செயல்கள் கொஞ்சம் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் சக்திவேல் விரித்த வலையில் குமரவேலுமிடம் அரசி சிக்கிக்கொண்டார். குமரவேலுவை பழிவாங்க வேண்டும் என்று அரசி தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலு வீட்டுக்கு போனார். ஆனால் அங்கு போனதிலிருந்து குமரவேலு செய்யும் சித்திரவதையே அரசி அனுபவிக்கும் படி சூழலை அமைந்து வருகிறது.

இதையெல்லாம் தாண்டி இன்று 500 வது எபிசோட்டை கொண்டாடும் விதமாக பாண்டியன் வீட்டிற்கு சக்திவேல் முத்துவேல் மற்றும் குமரவேல் அனைவரும் வந்து சந்தோசமாக கலந்து பேசி கொள்கிறார்கள். அத்துடன் மொத்த டீமும் சேர்ந்து கேக் வெட்டி அவர்களுடைய வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.